Our Feeds


Saturday, June 1, 2024

ShortNews Admin

190 பரீட்சார்த்திகளின் பெறுபேறுகள் நிறுத்திவைப்பு



2023 ஆம் ஆண்டுக்கான கல்வி பொதுத் தராதர உயர்தர பெறுபேறுகளில் 190. பரீட்சார்த்திகளின் பெறுபேறுகள் நிறுத்தப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

 

229,057 பாடசாலைப் பரீட்சார்த்திகளும், 40,556 தனிப்பட்ட பரீட்சார்த்திகளுமாக மொத்தமாக 269,613 பரீட்சார்த்திகள் 2023ஆம் ஆண்டு கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையில் தோற்றியிருந்தனர்.

 

இந்நிலையில், 151,343 பாடசாலைப் பரீட்சார்த்திகளும், 22,101 தனிப்பட்ட பரீட்சார்த்திகளுமாக 173,444 பரீட்சார்த்திகள் பல்கலைக்கழக அனுமதிக்கு தகைமைபெற்றுள்ளனர்.

 

அந்தவகையில் இம்முறை 64.33 சதவீதமானோர் பல்கலைக்கழக அனுமதிக்கு தகமையானவர்களாகக் காணப்படுகின்றனர்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »