Our Feeds


Monday, June 3, 2024

SHAHNI RAMEES

1700/= சம்பளம் | வர்த்தமானி அறிவித்தலை மீறிய கம்பனிகளின் குத்தகை ஒப்பந்தத்தை இரத்து செய்யுமாறு ஜனாதிபதி பணிப்பு

 



தோட்டத் தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பான

வர்த்தமானி அறிவித்தலை மீறிய கம்பனிகளின் குத்தகை ஒப்பந்தத்தை இரத்து செய்யுமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, தொழிலாளர் அமைச்சர் மனுஷ நாணயக்காரவுக்கு பணிப்புரை விடுத்துள்ளதோடு, குத்தகை ஒப்பந்தங்கள் தொடர்பாக புதிய சட்டங்களைத் தயாரிக்குமாறும் தெரிவித்துள்ளார்.




மேலும், குறித்த தோட்டங்கள் அரசாங்கத்துக்கு வழங்கப்படமாட்டாது எனவும் குத்தகை உடன்படிக்கையை முடிவுக்கு கொண்டுவந்து புதிய குத்தகை ஒப்பந்தத்தின் கீழ் தோட்டங்களை வேறு நிறுவனங்களுக்கு குத்தகைக்கு வழங்குமாறும் ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.




அரசாங்கத்தினால் குத்தகை ஒப்பந்தங்கள் இரத்து செய்யப்படும் தோட்ட கம்பனிகளை குத்தகைக்கு பெறுவதற்கு ஏற்கனவே பல புதிய நிறுவனங்கள் முன்வந்துள்ளதாகவும், ஒப்பந்தங்கள் இரத்து செய்யப்படும் தோட்டங்களை பொருத்தமான நிறுவனங்களுக்கு குத்தகைக்கு வழங்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.




இதேவேளை, அரசாங்கத்துக்கு சொந்தமான 22 பெருந்தோட்டங்கள் குத்தகை அடிப்படையில் தனியாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும், அரசாங்கத்துடன் செய்துகொண்ட ஒப்பந்தங்கள் எதிர்காலத்தில் இரத்து செய்யப்படும் எனவும் அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »