கொழும்பு உள்ளிட்ட சில பகுதிகளுக்கு நாளை (29) 15 மணித்தியால நீர் வெட்டு அமுல்படுத்தப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.
அதன்படி கொழும்பு, தெஹிவளை, கல்கிசை, ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டை, கடுவெல மாநகர சபைக்குட்பட்ட பகுதி, மஹரகம, பொரெலஸ்கமுவ, கொலன்னாவ நகர சபை பகுதி மற்றும் கொட்டிகாவத்தை - முல்லேரியா பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை குறித்த நீர் விநியோகத் தடை அமுல்படுத்தப்படவுள்ளது.
இதேவேளை, மொரட்டுவ மாநகரசபை பகுதிக்கு குறைந்த அளவிலான அழுத்தத்தில் நீர் விநியோகம் செய்யப்படவுள்ளது.
இலங்கை மின்சார சபையினால் மேற்கொள்ளப்படவுள்ள பராமரிப்புப் பணிகள் மற்றும் சுத்திகரிப்பு நிலையத்தின் திருத்தப்பணிகள் காரணமாகவே நீர் வெட்டு அமுல்படுத்தப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.