நாடளாவிய ரீதியில் நீதிமன்றங்களில் தற்போது 11 இலட்சத்திற்கும் அதிகமான வழக்குகள் நிலுவையில் உள்ளதாக நீதித்துறை சிறைச்சாலைகள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சின் செயலாளர் நிஹால் ரணசிங்க தெரிவித்துள்ளார்.
அந்த வழக்குகளை முடிக்க நீண்ட காலம் எடுக்கும் என்றும், சிறை நெரிசல் பெரும் பிரச்சினையாக உள்ளது என்றும் அவர் கூறினார்.
நாட்டில் நிலவும் சர்ச்சைகளின் எண்ணிக்கையுடன் ஒப்பிடுகையில் நீதிமன்றங்களின் எண்ணிக்கை மற்றும் நீதிபதிகளின் எண்ணிக்கை போதுமானதாக இல்லை எனவும் செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.
நீதியமைச்சினால் நேற்று (17) நடாத்திய இரண்டு வருட முன்னேற்றம் தொடர்பான ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.