பொசன் பண்டிகையை முன்னிட்டு, 11 பாடசாலைகளை மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில், அனுராதபுரம், மிஹிந்தலை மற்றும் தந்திரிமலை ஆகிய பகுதிகளில் உள்ள பதினொரு பாடசாலைகள் மூடப்படும் என வடமத்திய மாகாண கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
‘பொசன் வாரம்’ ஜூன் 18ஆம் திகதி தொடங்கி ஜூன் 20ஆம் திகதி நிறைவடையும் .
அதன்படி, அனுராதபுரம் மத்திய கல்லூரி, ஸ்வர்ணபாலி பாலிகா மகா வித்தியாலயம், வலிசிங்க ஹரிச்சந்திர மகா வித்தியாலயம், நிவட்டகச்சேதிய மகா பிரிவேனா, ஸாஹிரா தேசிய பாடசாலை, விவேகானந்தா தமிழ் மகா வித்தியாலயம், தேவானம்பியதிஸ்ஸபுர அல் அஸ்ஹர் வித்தியாலயம், மஹாபோதி மகா வித்தியாலயம், மிஹிந்தலை மஹா வித்தியாலயம், மிஹிந்தலை கம்மலக்ஞானம வித்தியாலயம், மிஹிந்தலை வித்தியாலயம், வித்தியாலயம் ஆகிய மூடப்படும்.
பொசன் வாரத்தில் கடமையாற்றும் பொலிஸாருக்கு தங்குமிட வசதிகளை வழங்குவதற்காக பாடசாலைகள் மூடப்படும்.
அநுராதபுரம் தேசிய பொசன் விழா குழு, சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் திலின ஹேவாபத்திரன மற்றும் வடமத்திய மாகாண கல்வி அமைச்சின் கோரிக்கைக்கு அமைய பாடசாலைகள் மூடப்படவுள்ளன.