2024ம் ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் 10 இலட்சத்திற்கும்
அதிக வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளனர்.இதற்கமைய 10 இலட்சமாவது சுற்றுலாப் பயணிகளாக அயர்லாந்திலிருந்து வருகை தந்த போல் ரோய் மற்றும் பெட்ரீஸியா தம்பதிகள் பதிவாகியுள்ளனர்.
அவர்களை வரவேற்கும் வகையில் விமான நிலையத்தில் நிகழ்வொன்றும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.