முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் பதவி விலகலும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பதவியேற்பும் உலகறிந்த விடயம். இவ்வாறு இருக்க ஜனாதிபதியாக எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாச தகுதியாக இருந்தார் என்றும், அவரால் பொருளாதாரத்தினை மீட்க முடியும் என்றும் அப்போது கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதி பதவியில் இருந்து விலக மறுத்ததாலேயே எதிர்க்கட்சித்தலைவர் பிரதமர் பதவியினை ஏற்கவில்லை என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் தெரிவித்திருந்தார்.
ShortNews இன் Short Talk அரசியல் கலந்துரையாடலில் பங்கேற்ற ஐ.ம.ச பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
ஏன் சஜித் பிரேமதாச அரசினை பொறுப்பெடுக்காது இருந்தார் என்பதற்கு தொடர்ந்தும் அவர் கருத்து தெரிவிக்கையில்;
"..ரணிலுக்கு ராஜபக்ஷர்களுடன் படுக்க ஏழுமென்டத்துக்கு சஜித் பிரேமதாசவுக்கு ஏலா. நான் தான் கடிதத்தை கோட்டாபய ராஜபக்ஷவின் ஆபிசில் கையளித்தேன். அப்போ ரணில் விக்கிரமசிங்க அங்கிருந்தார். சஜித் பிரேமதாச பதவியேற்க ரெடி, எப்ப கோட்டாபய விலகுறார் என்று உத்தியோகபூர்வமாக அறிவிக்கனும்னு சொன்னாரு, அதற்கு பதிலில்ல..
2015இல் ராஜபக்ஷவுடன் டீல் போட்டதால் தான் அரசாங்கம் தோற்றது. ரணிலுக்கு ராஜபக்ஷர்களுடன் டீல் போட ஏலும் எண்டதுக்கு சஜித் பிரேமதாசவுக்கு ஏலாது.."
கேள்வி : சஜித் பிரேமதாசவுக்கு ரணில் விக்கிரமசிங்க போன்று, நாட்டை முன்னோக்கி கொண்டு செல்லும் சக்தி இருக்கின்றதா?
".. டிவோஸ் பண்ணினவங்க திரும்பவும் கல்யாணம் முடிக்கிறா? நாங்க ஏன் அவர டிவோஸ் பண்ணினது? நாங்க அவர உட்டு வெளியே வந்தது டிவோஸ். அவர் ராஜபக்ஷர்களுடன் படுக்குறது ஒண்டு, இரண்டாவது அவர்ட குருந்துவத்த குழுவை போட்டுக்கொண்டு அவங்களோட தான் அவரு நாட்ட கொண்டு போவாரு.
ஏனென்டால் அவருக்கு எளியவங்கள பத்தின நெனப்பே இல்ல. இலக்ஷன் வர மொத கென்வசிங் போறதுக்கு மீட்டிங் போடுறதுக்குதான் ஏழை மக்கள் வேணும். வென்றதும் அவரு டை கோர்ட் போட்டு இருப்பாரு, அவர சுத்தி அவருக்கு தேவையான ஆள்கள் இருக்கும். அதுக்கு தானே நாங்க விலகினோம். டிவோர்ஸ் பண்ணிட்டு மறுக முடிக்குறன்னா மடயனாக இருக்கோணும்.."
"..சஜித் கொழும்பில கேக்காட்டி நான்தான் பெfஸ்ட் வந்தீப்பன்.. சஜித்தால நான் இரண்டாவது ஆகிட்டன்.. கொழும்பு மக்களின் பிரச்சினைகளை தீர்க்கும் ப்ளேன் எங்ககிட்டு ஈக்குது.. உம்மா கடயப்பம் வித்தா மகளும் கடயப்பம் விக்கிற கதைய நிப்பாட்டனும். ஆட்டோ ஓட்டுரவர்ட மகள் யுனிவர்சிட்டி போஹனும், சஜித் பிரேமதாச அரசாங்கத்தில் எனக்கு கெபினட் மினிஸ்டர் தாரன்னு ஈக்குது.. நான் கேட்டெடுத்தேன் அத செஞ்சி தீருவேன்.."
".. சஜித் பிரேமதாச தலைமையில் உள்ள ஐக்கிய மக்கள் சக்தியில் இனவாதம் இல்லை..." எனவும் அவர் அதில் தெரிவித்தார்.