Our Feeds


Tuesday, May 28, 2024

Zameera

‘STARLINK’ சேவைக்கான முன்பதிவுகளை மேற்கொள்ள வாய்ப்பு


 நாட்டிலேயே அதிவேக இணைய இணைப்பான எலோன் மஸ்க்கின் ‘Starlink’ சேவைக்கான முன்பதிவுகளை மேற்கொள்ள இலங்கையர்களுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.

அதன்படி, ‘ஸ்டார்லிங்க்’ இணையத்தளத்திற்குச் சென்று முன்கூட்டிய ஆர்டர் செய்யலாம்.

தற்போது உலகின் 99 நாடுகளில் ‘ஸ்டார்லிங்க்’ இணைய சேவை மிகவும் வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறது.

இந்த இணைய சேவையை இணைப்பதன் மூலம் நாட்டில் இணையதள வசதிகள் குறைவாக உள்ள பகுதிகள் எந்த பிரச்சினையும் இன்றி இணையதள வசதிகளை பெற முடியும் என கூறப்படுகிறது.

அண்மையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இந்தோனேசியாவுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தில் பங்குபற்றிய போது ஜனாதிபதிக்கும் டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் தலைவர் எலோன் மஸ்க்கிற்கும் இடையில் விசேட சந்திப்பொன்று இடம்பெற்றது.

அங்கு “Starlink” செயற்திட்டத்தை இலங்கையில் ஆரம்பிக்க வேண்டியதன் அவசியத்தை சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, இலங்கையில் அவ்வாறானதொரு திட்டத்தை ஆரம்பிக்க தேவையான அதிகபட்ச ஆதரவை வழங்குவதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

அதன்படி, இலங்கையில் “ஸ்டார்லிங்க்” திட்டத்தை தொடங்குவதற்காக எலோன் மஸ்க் இந்த வருட இறுதியில் இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »