சிங்கப்பூர் பொலிஸ் திணைக்களத்தில் துணை பொலிஸ்
அதிகாரிக்காக (Auxiliary Police Officer) இலங்கையில் நேர்முக பரீட்சை நடாத்தப்படவுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவிக்கின்றது.
இதன்படி, முதற்கட்டமாக 100 இலங்கையர்களை தேர்வு செய்யும் வகையில் இந்த நேர்முக பரீட்சை நடாத்தப்படவுள்ளது.
கொழும்பு 05 – லலித் அத்துலத் முதலி விளையாட்டரங்கில் நாளை (03) முதல் எதிர்வரும் 06ம் திகதி வரை இந்த நேர்முக பரீட்சை நடாத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நாளை முதல் 06ம் திகதி வரை காலை 06.30 முதல் முற்பகல் 10 வரை இந்த நேர்முக பரீட்சை நடாத்தப்படவுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவிக்கின்றது.
தகைமைகள்
01.G.C.E (A/L) பரீட்சையில் குறைந்தது 3 C சித்திகள்.
02.ஆங்கில மொழி தேர்ச்சி
03.வயது :- 21 முதல் 39 வரை
04.பொலிஸ் அறிக்கை
05.மருத்துவ ரீதியில் உடல் தகுதி
06.உடலில் பச்சை குத்தி இருக்கக்கூடாது.
07.உயரம் :- 164 CM
08.குறைந்த பட்ச உடல் எடை :- 50KG
மேலதிக தகவல்களுக்கு அழையுங்கள் :- 070-6788110