இலங்கை மின்சார சபையின் சுமார் 130 பொறியியலாளர்கள் அண்மைக்காலமாக சேவையில் இருந்து விலகியுள்ளதாக தெரியவந்துள்ளது.
அரசாங்க பொறுப்பு முயற்சிகள் தொடர்பான குழு அல்லது கோப் குழுவில் இது தெரியவந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
பாராளுமன்ற உறுப்பினர் மதுர விதானகேவினால் முன்வைக்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த இலங்கை மின்சார சபையின் பிரதி முகாமைத்துவப் பணிப்பாளர் பாலித பெரேரா, பொறியியலாளர்களுக்கான 330 வெற்றிடங்கள் காணப்படுவதாகத் தெரிவித்தார்.
"கடந்த வருடம் மற்றும் இம்மாதம முதல் 4 மாதங்களில் 130 பேர் ராஜினாமா செய்திருக்கிறார்கள். ஓய்வு பெற்றவர்களை பணியில் சேர்க்காததால், 330 பொறியாளர்கள் பற்றாக்குறை உள்ளது.
ஏ.எஸ்.மின் ஆலையை வாங்க முன்வந்தபோது, அதை செய்யாமல் அவசரகால கொள்முதல் ஊடாக பலகோடி ரூபாய் மின்சார சபைக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும் கோப் குழுவில் தெரியவந்துள்ளது.