இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் இஸ்லாமிய கற்கைகள்
மற்றும் அரபு மொழி பீடத்தின் பத்தாவது சர்வதேச ஆய்வரங்கானது எதிர்வரும் செவ்வாய்க்கிழமை 14. 5. 2024 அன்று நடைபெற ஏற்பாடாகியிருந்தது.எனினும் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் அனைத்து பல்கலைக்கழக கல்வி சாரா ஊழியர்களின் தொடர் வேலை நிறுத்த போராட்டம் காரணமாக குறித்த சர்வதேச ஆய்வரங்கை திட்டமிட்ட திகதியன்று நடாத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளதால் குறித்த ஆய்வரங்கானது மறு அறிவித்தல் வரை பிற்போடப்பட்டுள்ளது.
இருப்பினும் கல்வி சாரா ஊழியர்களின் வேலைநிறுத்தம் முடிவுக்கு வந்ததன் பின் ஆய்வரங்கு நடைபெறும் புதிய திகதி அறிவிக்கப்படும் என தென்கிழக்கு பல்கலைக்கழக இஸ்லாமிய கற்கைகள் மற்றும் அரபு மொழி பீடத்தின் சர்வதேச ஆய்வரங்க குழு தெரிவித்துள்ளது.