இலங்கைக்கு வருகைதந்துள்ள தெற்கு மற்றும் மத்திய ஆசிய பிராந்தியத்திற்குப் பொறுப்பான ஐக்கிய அமெரிக்காவின் உதவிச் செயலாளர் டொனல்ட் லூ அவர்களுக்கும் தேசிய மக்கள் சக்தியின் பிரதிதிகளுக்கும் இடையிலான கலந்துரையாடலொன்று நேற்று (13) Galle Face ஹோட்டல் வளாகத்தில் நடைபெற்றது. அவ்வேளையில் இலங்கைக்கான ஐக்கிய அமெரிக்க தூதுவர் திருமதி ஜுலி சங் அவர்களும் கலந்துகொண்டார்.
தேசிய மக்கள் சக்தியை பிரதிநிதித்துவம் செய்து அதன் தேசிய நிறைவேற்றுப் பேரவை உறுப்பினர்களான பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத், வசந்த சமரசிங்க மற்றும் டாக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ ஆகியோர் கலந்துகொண்டனர்.
இலங்கையின் நடப்பு பொருளாதார நிலைமை, சர்வதேச நாணய நிதியத்தின் இடையீடு, சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தலை நடாத்துதல் மற்றும் இந்து சமுத்திர பிராந்தியத்தின் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் பற்றி இதன்போது இருதரப்பினரதும் கவனஞ் செலுத்தப்பட்டது.