பொருளாதார மாற்ற சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்துள்ளது.
3-25-2024 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில், பொருளாதார மாற்ற சட்டமூலத்தின் ஆரம்ப வரைவுக்கு கொள்கையளவில் ஒப்புதல் அளிக்கப்பட்டு, சட்டமா அதிபரால் முன்மொழியப்பட்ட திருத்தங்கள் முறையான சட்டமூலத்தை உடனடியாக தயாரித்து சமர்பிப்பதற்கான வரைவுச் சட்டங்களுக்கு அறிவுறுத்தியுள்ளதாக அரசாங்கம் கூறுகிறது.
அதன்படி தயாரிக்கப்பட்ட சட்டமூலத்துக்கு சட்டமா அதிபரின் அனுமதி கிடைத்துள்ளது.
இந்த சட்டமூலத்தை அரசாங்க வர்த்தமானியில் பிரசுரிப்பதற்கும் பின்னர் பாராளுமன்றத்தின் ஒப்புதலுக்காக சமர்ப்பிப்பதற்கும் ஜனாதிபதி முன்வைத்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.