Our Feeds


Wednesday, May 15, 2024

SHAHNI RAMEES

மூத்த பத்திரிக்கையாளர் சித்தீக் காரியப்பர் வீரகேசரியிலிருந்து விடைபெற்றார்.

 


மூத்த பத்திரிக்கையாளர் சித்தீக் காரியப்பர்

வீரகேசரியிலிருந்து விடைபெற்றார்.


மூத்த பத்திரிக்கையாளர் சித்தீக் காரியப்பர் 14 ஆண்டுகளின் முடிவில் வீரகேசரி பத்திரிக்கையிலிருந்து விடைபெற்றார். 


இது தொடர்பில் அவர் தனது முகநூல் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளதாவது.


வீரகேசரி நிறுவனத்தில் கடந்த 14 வருடங்கள் பணியாற்றிய நிலையில் எதிர்வரும் ஜுன் முதலாம் திகதியுடன் ஓய்வு பெறுகிறேன். 


ஓய்வு என்பதைவிட பதவியை இராஜினாமா செய்துள்ளேன் என்பதே பொருத்தம். 


கடந்த மாதம் 28 ஆம் திகதி  எமது நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் உயர்திரு குமார் நடேசன் அவர்கள் என்னை அழைத்து எனது சேவை தொடர்ந்து நீடிக்கப்படுவதாக கூறினார்.


அதனடிப்படையில்  எமது நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி  உயர்திரு செந்தில் நாதன் அவர்கள் என்னை  இம்மாதம் 2 ஆம் திகதி அழைத்து எனக்கான சேவை நீடிப்பு கடிதத்தை வழங்கி தொடர்ந்து கடமையாற்றும்படி அவரும் கேட்டுக் கொண்டார். 


இருப்பினும் எனது குடும்ப சூழ்நிலை காரணமாக தொழிலை இராஜினாமா செய்துள்ளேன்.


கடந்த 14 வருடங்கள் வீரகேசரி நிறுவனத்தில் நான் கடமையாற்றிய மகிழ்ச்சிகரமான சூழலை நான் மறக்கவில்லை.  அனைவரும் என்னுடன் அன்போடும் தோழமையோடும் நடந்து கொண்டார்கள். 


'சித்தீக் அண்ணா', ' சீத்தீக் அங்கிள்' என்று குடும்ப உறவினர் ஒருவரைப் போன்றே என்னை மதித்து அழைப்பார்கள். 


விசேடமாக எனது உடல் நலனில்  அவர்கள் காட்டிய அக்கறை என்னை பலமுறையும் நெகிழச் செய்துள்ளது.


எமது முகாமைத்துவ  பணிப்பாளர் குமார் நடேசன், அவரது உத்தியோகபூர்வ அந்தரங்கச் செயலாளர் பிரேமா தயாபதி மேடம், பிரதம செயற்பாட்டு அதிகாரி செந்தில்நாதன், நிதிப் பணிப்பாளர் திருமதி அமுனுகம, ஆளணி முகாமையாளர், செய்திப் பணிப்பாளர் பிரபாகன் , வீரகேசரி மற்றும் வீரகேசரி வாரவெளியீடுகளின் ஆசிரியர் ஸ்ரீகஜன், விடிவெள்ளி ஆசிரியர்  பைரூஸ் மற்றும் பிரிவுத் தலைவர்கள், பிரிவு பொறுப்பதிகாரிகள் , ஊடகவியலாளர்கள், ஏனைய அனைத்து ஊழியர்கள், சிற்றூழியர்கள்  உட்பட அனைவருமே மிக நெருக்கமாகவும் நேசமாகவும் என்னுடன் பழகிய ஒரு நிலையிலேயே அங்கிருந்து விடைபெறுகிறேன்.


மேலும் வீரகேசரி நிறுவனம் எனது புகுந்த வீடாக இருந்தாலும்  எனக்கு உலக தமிழ் முகவரி தந்த அந்த நிறுவனத்துடனான எனது உறவு என்பது தொப்புள்கொடி உறவுபோன்று தொடர்ந்து  நிலைக்கும்.


என்னை வீரகேசரியில் இந்த நிலைமைக்கு கொண்டு வந்தவரான திருவாளர் ஆர்.சேதுராமன் அவர்களை நான் மறப்பதென்றால் நான் இறக்க வேண்டும். அவருக்கு மனமார்ந்த நன்றிகள்.


தற்போது நான் கடமை புரியும் வீரகேசரி ஒன்லைன் பொறுப்பதிகாரி பிரியதர்ஷன் அவர்களையும்  நன்றியுடன் நினைத்துக் கொள்கிறேன்.


நான் ஓய்வாக வீட்டிலிருந்தாலும் எனது ஊடகப் பயணம் தொடரும். 


எனக்கு ஒத்துழைத்த  அனைவருக்கும் நன்றிகள்.


-ஏ.எச்.சித்தீக் காரியப்பர்.

செய்தி ஆசிரியர்,

வீரகேசரி இணையம்.

கனிஷ்ட முகாமையாளர் எக்ஸ்பிரஸ் நியூஸ் பேப்பர்ஸ் ஒவ் சிலோன் லிமிடெட்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »