Our Feeds


Thursday, May 2, 2024

ShortNews Admin

அநுர குமாரவை சந்தித்தார் நோர்வே தூதுவர்


 நோர்வே தூதுவர் மே-எலின் ஸ்டெனர் மற்றும் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திசாநாயக்க ஆகியோருக்கிடையிலான சந்திப்பு மக்கள் விடுதலை முன்னணியின் காரியாலயத்தில் இன்று வியாழக்கிழமை (2) பிற்பகல் இடம்பெற்றது.

இந்த சந்திப்பில் நோர்வே தூதரகத்தின் இரண்டாவது செயலாளரான ஜோன் பிஜேர்கெம் , தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹரினி அமரசூரிய மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதன்போது, நாட்டில் தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடி தொடர்பிலும் அரசியல் ரீதியிலான பிரச்சனைகள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டன.

இந்நிலையில் நோர்வே அரசாங்கத்தினால் இலங்கைக்கு வழங்கப்படவுள்ள உதவிகள் மற்றும் இரு நாடுகளுக்கிடையிலான உறவை வலுப்படுத்தலின் அவசியம் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »