பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 1700 ரூபா சம்பளத்தை வழங்குவது தொடர்பில் வெளியிடப்பட்ட வர்த்தமானி குறித்து பெருந்தோட்ட நிறுவனங்களிடமிருந்து இதுவரையில் எவ்வித முறைப்பாடுகளும் கிடைக்கவில்லை என தொழில் திணைக்களம் தெரிவித்தது.
கடந்த 30 ஆம் திகதி வெளியிடப்பட்ட வர்த்தமானி தொடர்பில் ஆட்சேபனையினை தெரிவிக்கும் காலம் நாளையுடன் நிறைவடைகின்ற நிலையில், குறித்த வர்த்தமானி தொடர்பில் பெருந்தோட்ட நிறுவனங்களிடமிருந்து இதுவரையில் எவ்வித முறைப்பாடுகளோ, ஆட்சேபனைகளோ கிடைக்கவில்லை என தொழில் திணைக்களத்தின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
நாளைய தினம் வரை பெருந்தோட்ட நிறுவனங்களிடமிருந்து எவ்வித ஆட்சேபனைகளோ எதிர்ப்புகளோ தெரிவிக்கப்படாத பட்சத்தில், சம்பளம் தொடர்பில் தொழில் அமைச்சர் தீர்மானமொன்றை எடுப்பார் என அவர் தெரிவித்தார்.