குறித்த வழக்கு இன்று (27) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே கொழும்பு நீதவான் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்ததாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
Aura Lanka நிறுவனத்தின் தலைவர், வர்த்தகர் விரஞ்சித் தம்புகல, கடந்த மே மாதம் 22 ஆம் திகதி நிதி மோசடி குற்றச்சாட்டின் பேரில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு, கொழும்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் இன்று வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.
Aura Lanka குழும நிறுவனங்களின் தலைவர், லங்கா பிரீமியர் லீக்கில் ‘தம்புள்ள Aura’ அணியின் முன்னாள் உரிமையாளர் என்பது குறிப்பிடத்தக்கது.