பல கோரிக்கைகளை முன்வைத்து, மத்திய மாகாணத்தில் உள்ள வைத்தியசாலைகளில் இன்று (13) காலை பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபடுவதற்கு சுகாதார தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு தீர்மானித்துள்ளது.
இன்று ஆரம்பமாகவுள்ள வேலைநிறுத்தப் போராட்டம் நாளுக்கு நாள் பல்வேறு மாகாணங்களை உள்ளடக்கியதாக அமுல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக சுகாதார தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
சுகாதார தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு கடந்த காலங்களில் பல தடவைகள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதுடன், DAT க்கு இணையான கொடுப்பனவு அல்லது போக்குவரத்து மற்றும் வைத்தியர்களுக்கு கட்டுப்பாடற்ற கொடுப்பனவுகளை வழங்குமாறு கோரி இருந்தமையும் குறிப்பிடத்தக்கது.