நான் ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்ததாக வெளியான செய்திகளில் உண்மையில்லை என முன்னாள் அமைச்சர் அர்ஜுன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
தலவாக்கலை பிரதேசத்தில் ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதிநிதிகளின் பங்குபற்றுதலுடன் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மே தினக் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் அர்ஜுன ரணதுங்க அண்மையில் இணைந்து கொண்டிருந்தார்.
எவ்வாறாயினும், நாடாளுமன்ற உறுப்பினர் பழனி திகாம்பரத்தின் அழைப்பின் பேரில் தான் இந்த பேரணியில் கலந்து கொண்டதாகவும் தான் ஐக்கிய மக்கள் சக்தியில் இணையவில்லை எனவும் முன்னாள் அமைச்சர் அர்ஜுன ரணதுங்க மேலும் தெரிவித்துள்ளார்.