மனித பாவனைக்கு பொருத்தமற்ற பால் உற்பத்தி பொருட்களை உற்பத்தி செய்த தொழிற்சாலைக்கு சீல் வைக்க கெக்கிராவை சுகாதார அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
பால் சார்ந்த தயிர், ஐஸ்கிரீம், திரவ தயிர், பானங்கள், போன்ற பல பொருட்கள் அந்த தொழிற்சாலையில் தயாரிக்கப்படுகின்றன.
குறித்த தொழிற்சாலையின் உற்பத்திப் பொருட்கள் நாடளாவிய ரீதியில் பல பகுதிகளிலும் விநியோகிக்கப்படுவதுடன், பொருட்களின் நிலை குறித்து வாடிக்கையாளர்களிடம் இருந்து கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளின் அடிப்படையில் அந்த இடம் சோதனைக்குட்படுத்தப்பட்டுள்ளது.
குறித்த உற்பத்தி நிறுவனத்தில் உணவு பாதுகாப்பு விதிமுறைகளை மீறி உற்பத்தி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவது குறித்து அவதானித்த அதிகாரிகள் குறித்த தொழிற்சாலைக்கு சீல் வைத்துள்ளனர்.
இதற்கிடையில், அந்த தொழிற்சாலையின் ஊழியர்களின் உடல்நிலை குறித்தும் கவனம் செலுத்தப்பட்டதுடன், பல்வேறு தோல் நோய்களால் பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் உணவு உற்பத்தி பணியில் ஈடுபடுத்தப்பட்டதையும் அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.