அத்துடன், இப்பகுதியில் உள்ள கராபன்டைன் மரங்கள் மற்றும் பாரிய மரங்கள் எந்த நேரத்திலும் விழும் அபாயம் காணப்படுவதாக சாரதிகளும் பிரதேசவாசிகளும் சுட்டிக்காட்டுகின்றனர்.
இந்த வீதியை பயன்படுத்துவோர் மாற்று வீதிகளை பயன்படுத்துமாறும், மாற்று வீதியாக தியத்தலாவ உடபர கஹகொல்ல ஊடாக பண்டாரவளை வீதியை பயன்படுத்துமாறும் தியத்தலாவ பொலிஸ் நிலைய பிரதான பொலிஸ் பரிசோதகர் சாகர தயாரத்ன தெரிவித்தார்.
தியத்தலாவ இராணுவம், தியத்தலாவ பொலிஸார், ஹப்புத்தளை விசேட அதிரடிப்படை, ஹப்புத்தளை பிரதேச சபை, ஹப்புத்தளை பிரதேச செயலகம் ஆகியவற்றின் அனர்த்த பிரிவின் குழுக்கள் இணைந்து பிரதான வீதியில் வீழ்ந்துள்ள மரங்களை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளதாக பதுளை அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பிரதிப் பணிப்பாளர் திரு.ஈ.எம்.எல்.உதய குமார தெரிவித்தார்