Our Feeds


Tuesday, May 14, 2024

Zameera

சட்டவிரோத நிதி நிறுவனம் மற்றும் பிரமிட் திட்ட மோசடிக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும்


 சட்டவிரோத நிதி நிறுவனம் மற்றும் Onmax DT பிரமிட் திட்ட மோசடிகளால் ஏராளமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று செவ்வாய்க்கிழமை (14)  பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

இதேவேளை, நாடளாவிய ரீதியில் மக்கள் இந்த மோசடியில் சிக்கியுள்ளனர். அரசாங்கத்தின் தலையீட்டில் இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

கடந்த காலங்களில் இயங்கி வந்த இணையவழி தளங்கள் ஊடாக தொழிற்படும் கடன் வழங்கும் நிறுவனங்களுக்கு எதிராக அரசாங்கம் நடவடிக்கை எடுத்தது போன்று, இந்த பிரமிட் திட்டங்களுக்கும் எதிராக நடவடிக்கை எடுக்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வேண்டுகோள் விடுத்தார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »