தற்போது நடைபெற்று வருகின்ற க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கு இடையூறுவிளைவிக்கும் வகையிலான எவ்வித பாரதூரமான சம்பவங்களும் இதுவரையிலும் பதிவாகவில்லை என்று பரீட்சைகள் ஆணையாளர்நாயகம அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
கணிதப் பாடம் மற்றும் எதிர்வரும் நாட்களில் இடம்பெறவுள்ள ஏனைய பாடங்களும், நடைபெறவுள்ள அனைத்து பரீட்சை மத்திய நிலையங்களிலும் எவ்வித அசம்பாவிதங்களும் தடைகளும் இன்றி நடாத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக, உரிய அதிகாரிகள், மாகாண மற்றும் வலய மட்டத்தில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.