தேர்தலை பிற்போடுவது நல்லது என தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்கினேஸ்வரன் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
தற்பொழுது இந்த நாடு மோசமான பொருளாதார பிரச்சனைகளால் காணப்படுகிறது. ஆகவே இப்பொழுது ஒரு ஜனாதிபதி தேர்தல் அல்லது ஒரு பொது தேர்தலை நடத்தினால் புதிதாக வேறு ஒருவர் வந்தால் இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் எல்லாம் மாற்றம் அடையும்.
மாற்றம் அடையும் போது எமது நாட்டின் ஸ்திரத்தன்மையை பாதிக்கும் ஸ்திரத்தன்மை பாதிக்கப்பட்டால் எங்களுடைய பொருளாதார முன்னேற்றம் தடைப்படும்.
ஆகவே இது தொடர்பாக நடவடிக்கைகளை எடுத்து அதை இரண்டு வருடங்களுக்கு ஒத்தி வைத்தால் இது தொடர்பாக என்ன செய்யப்போகிறார்கள் தொடர்பாக தெரியவில்லை.
மக்கள் தீர்ப்பிற்கு போகப் போகிறார்களா அல்லது பாராளுமன்றத்தில் இருக்கின்ற தங்களது கூடிய வாக்கு பலத்தை வைத்து செய்யப்போகிறார்களா என்பது பற்றி தெரியாது.
அவ்வாறு செய்வது நல்லது என்பது இந்த நாட்டின் ஸ்திரத்தன்மை எந்த விதத்திலும் பாதிக்ககூடாது என்பதால் என தெரிவித்தார்.