Our Feeds


Friday, May 24, 2024

Zameera

டெங்கு நோய் பரவலை கட்டுபடுத்த உடனடி நடவடிக்கை - சாகல ரத்நாயக்கவினால் ஆலோசனை


 மழையுடனான காலநிலையினால்   நாடளாவிய ரீதியில் டெங்கு நோய் பரவும் அபாயம் உள்ளதால், டெங்கு நோய் பரவலை கட்டுபடுத்துவதற்கு உடனடி நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதியின் தேசிய பாதுகாப்பு தொடர்பான சிரேஷ்ட ஆலோசகரும், ஜனாதிபதி செயலகத்தின் பிரதானியுமான சாகல ரத்நாயக்கவினால் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

மே 26ஆம் திகதி முதல் ஜூன் 1ஆம் திகதி வரை நடைபெறவுள்ள டெங்கு ஒழிப்பு  வாரத்தின் போது கல்வி அமைச்சின் ஊடாக பாடசாலை மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு விசேட விழிப்புணர்வு வேலைத்திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது.

அத்தோடு, பொது இடங்களின் சூழலைச் சுற்றி பரவும் டெங்கு அபாயத்தைக் குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கையினை கடைப்பிடிக்காதவர்களுக்கு எதிராக சட்டத்தை அமுல்படுத்துவதற்கு உரிய திணைக்களங்களுக்கு அறிவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, மே மாதத்தில் 1,810 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாகவும், ஒன்பது மரணங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »