மைத்திரிபால சிறிசேன, ரணில் ஆட்சிக்காலம் ஒரு உதாரணம் என யாழ்ப்பாணம் வடமராட்சி ஊடக இல்லத்தில் நேற்று (13) நடைபெற்ற ஊடக சந்திப்பில் பாராளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி எம். ஏ. சுமந்திரன் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
முதலாவது தேர்தலில் தமிழ் மக்கள் சரத் சரத் பொன்சேகாவிற்கு வாக்களித்தார்கள், நாங்கள் சொல்லி தான் மக்கள் அவருக்கு வாக்களித்தார்கள் என்பது பொய். தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு கிடைத்த வாக்குகளை விட சரத் பொன்சேகாவிற்கு இரண்டு மடங்காக மக்கள் வாக்களித்தார்கள்.
ஆகவே நாங்கள் கூறி தான் அவருக்கு வாக்களித்தார்கள் என்பது தவறு, தமிழ் மக்கள் சரத் பொன்சேகாவிற்கு வாக்களிக்க தீர்மானித்து விட்டார்கள். அது ஒரு எதிர்ப்பு வாக்கு மகிந்த ராசபக்சவிற்கு எதிரான வாக்கு.
அம்பாறையில் ஒரு சிறிய கிராமத்தில் மக்கள் கருத்து கேட்ட போது ஒரு இளைஞன் கூறிய கருத்து, மகிந்தாவும் எங்களுக்கு எதிரி தான் மைத்திரிபாலவும் எதிரி தான் ஆனால் எங்களுக்கு ஒரு எதிர்மாற்றம் தேவை என கூறி தான் வாக்களித்தார்கள்.
ஆயிரக்கணக்கான காணிகள் விடுவிக்கப்பட்டது உண்மை மைத்திரிபால சிறிசேன காலத்தில் எங்களுக்கு எதிராக இருந்த பல அடக்குமுறைகள் இல்லாமால் ஆக்கப்பட்டது உண்மை மக்களுக்கு மிகவும் அத்தியாவசியமாக இருக்கின்ற விடயங்களை நாங்கள் அடையலாம் அதற்கு மைத்திரிபால சிறிசேன, ரணில் ஆட்சிக்காலம் ஒரு உதாரணம் என தெரிவித்தார்.