குறித்த சிறுமியின் கையில் 6 விரல்கள் உள்ளதால் பெற்றோர் சிறுமியை வைத்தியசாலைக்கு அழைத்து சென்றுள்ளனர். இதனையடுத்து சிறுமியை பரிசோதித்த வைத்தியர்கள், அவருக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் எனத் தெரிவிக்கவே அதற்கு பெற்றோரும் ஒப்புக்கொண்டுள்ளனர்.
இதனையடுத்து சிறுமியை சத்திரசிகிச்சை அறைக்கு அழைத்து சென்றனர். சிகிச்சை முடிந்து சிறுமி திரும்பிய போது, பெற்றோருக்கு அதிர்ச்சி காத்திருந்துள்ளது.
அறுவை சிகிச்சை முடிந்த பின்னர், கைக்கு பதில், வாயில் பிளாஸ்டர் ஒட்டப்பட்டிருந்துள்ளது. சிறுமியை பரிசோதித்தபோது, கையில் 6ஆவது விரலும் இருந்துள்ளது.
இது குறித்து, அறுவை சிகிச்சையின்போது உடன் இருந்த தாதியிடம் பெற்றோர்கள் கேட்டுள்ளனர். அவர் நாக்கில் பிரச்சினை இருந்ததால் அதனை சரி செய்தோம் என்று பதிலளித்துள்ளார்.
இதனையடுத்து அங்குவந்த வைத்தியர் நடந்த தவறுக்கு மன்னிப்புக் கோரியதுடன், 6ஆவது விரலை அகற்றுவதாக கூறி சிறுமியை மீண்டும் அழைத்து சென்றுள்ளார்.
இது குறித்து தகவல் வெளியில் தெரியவரவே, இச்சம்பவம் குறித்து, விசாரணைக்கு அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.
ஏற்கனவே, 30 வயது மதிக்கத்தக்க பெண்ணுக்கு அதே வைத்தியசாலையில் அறுவை சிகிச்சை செய்த போது வயிற்றில் கத்திரிக்கோளை வைத்து தைத்து விட்டதாக அந்த பெண் முறைப்பாடளித்துள்ள நிலையில், தற்போது தவறாக மாற்றி அறுவை சிகிச்சை செய்யப்பட்டமை அங்கு செல்லும் நோயாளிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.