வெற்றி பெற்ற விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்கும்
வகையில் விளையாட்டு பாதணிகள் அன்பளிப்பு...பொருளாதார வசதிகள் குறைந்த கண்டி தெல்தெணிய வலைய உடுதும்பரை இரண்டாம் நிலை பாடசாலையில் காற்பந்து வீரர்களுக்கு தேவையான விளையாட்டு பாதனைகளை சமூக ஆர்வலர் சமீல் அஹமத் அவர்களுடன் இணைந்து அக்குறணை பிரதேச சபை முன்னால் தவிசாளர் கௌரவ இஸ்திஹார் இமாதுதீன்அவர்களினால் அன்பளிப்பு செய்யப்பட்டது.
இம்மானவர்களது வெற்றி செய்திகள், மத்திய மாகாண ஆளுநர் சட்டத்தரணி லலித் யூ கமகே அவர்களது கவனத்தை ஈர்த்ததற்கமைய, மத்திய மாகாணத்தின் பிரதான கல்வி அமைச்சகத்தின் செயலாளர் மேனக ஹேரத் ஆகியோரின் ஒழுங்கமைப்பின் கீழ், தேசிய அளவிலான போட்டி நிகழ்ச்சிகள் ஆரம்பிப்பதற்கு முன்னரே பாதணிகளை வழங்க முடியுமாக இருந்தது.
இந்நிகழ்வு நேற்றைய தினம் (30.04.2024) கண்டி பொறியியல் திணைக்கள மண்டபத்தில் ஆளுநர் தலைமையில் நடைபெற்றது.
(Under) 12 வயது (Under) 16 வயதுக்கு கீழ் பட்டவர்களுக்கு நடைபெற்ற கால் பந்தாட்டப் போட்டி நிகழ்ச்சிகளில் வெற்றி பெற்ற உடுதும்பரை இரண்டாம் நிலை பாடசாலை மாணவர்களுக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றேன்.