ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தொகுதி அமைப்பாளர்கள் மற்றும் கட்சியினர் இன்று (08) கொழும்புக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
அக்கட்சியின் தேர்தல் பிரசாரம் தொடர்பான விடயங்கள் குறித்து கலந்துரையாடுவதற்காக அவர்கள் அழைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
கட்சியின் ஸ்தாபகர் பசில் ராஜபக்ஷ தலைமையில் நெலும் மாவத்தையில் உள்ள கட்சி அலுவலகத்தில் இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளது.
இதேவேளை, ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்றக் குழுவிற்கும், பசில் ராஜபக்ஷவுக்கும் இடையில் நேற்று கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.
இதன்போது, இம்மாத இறுதியிலிருந்து கிராம மட்டத்தில் கட்சியின் தேர்தல் பிரசாரத்தை ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.