வெள்ளவத்தையில் ஏற்பட்ட காற்றினால் பாதிக்கப்பட்ட வீட்டுக்கு களத்துக்குச் சென்று உதவினார் கலாநிதி ஜனகன்...!
நாட்டில் நிலவும் அசாதாரண காலநிலையினால் ஏற்பட்ட பெரும் காற்றினால் வெள்ளவத்தை குரே வீதியில் அமைந்துள்ள குறைந்த வருமானம் பெரும் ஒரு குடும்பத்தினரின் வீட்டுக் கூரையில் ஏற்பட்ட சேதத்தில்அக் குடும்பத்தினரின் அன்றாட வாழ்வு நிலை பாதிக்கப்பட்டிருந்ததை அறிந்த ஐ டி எம் ன் சி (IDMNC) சர்வதேச கல்வி நிறுவனத்தின் தவிசாளரும், ஜனனம் அறக்கட்டளையின் தலைவருமான கலாநிதி.வி.ஜனகன் அவர்கள் இன்று(27) உடன் களத்துக்கு விஜயம் செய்து அவ் வீட்டை பார்வையிட்டதுடன், வீட்டை திருத்துவதற்கான சீமந்து கூரை தகடுகளை பெற்றுக்கொடுத்து உடன் உதவினார்.