இந்தியாவில் இருந்து அதிக அளவில் வெங்காயம் இறக்குமதி செய்யப்படுவதால், சீன வெங்காயத்தின் தேவை குறைந்துள்ளதால், அவற்றை கையிருப்பில் இருந்து நீக்க வேண்டியுள்ளதாக புறக்கோட்டையில் உள்ள வர்த்தகர்கள் கூறுகின்றனர்.
கடந்த நாட்களில் ஒரு கிலோ சீன வெங்காயம் 300 ரூபாய்க்கு விற்கப்பட்டதாகவும், தற்போது ஒரு கிலோ சீன வெங்காயம் 100 ரூபாய்க்கு கூட விற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கின்றனர். நெதர்லாந்தில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பெரிய வெங்காயம் இரண்டு கிலோ 100 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுகிறது.
ஒரு கிலோ இந்திய வெங்காயத்தின் விலை 150 முதல் 250 ரூபாய் வரை குறைந்துள்ளது.