கல்முனையில் இருந்து மஹரகம நோக்கி பிரயாணித்த
இலங்கை போக்குவரத்து பஸ்வண்டி ஒன்று மட்டக்களப்பு செங்கலடி சிக்னல் சந்தியில் வீதியை விட்டு விலகி மின்கம்பத்துடன் மோதி விபத்துக்கு உள்ளானதில் 5 பேர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை(5) நள்ளிரவு 1.45 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக ஏறாவூர் பொலிசார் தெரிவித்தனர்.பொலனறுவை டிப்போவுக்கு சொந்ததமான பஸ்வண்டி நேற்று இரவு 12 மணிக்கு கல்முனையில் இருந்து மட்டக்களப்பு ஊடாக மஹரகமவுக்கான பிரயாணித்த போது செங்கலடி சிக்னல் சந்தியில் வேகக் கட்டுப்பாட்டை மீறி வீதியை விட்டுவிலகி மின்கம்பத்துடன் மோதி மின்பிறப்பாக்கியை உடைத்துக் கொண்டு கடை தொகுதிக்குள் உட்புகுந்து விபத்துக்குள்ளானது
இதில் சாரதி நடத்துனர் உட்பட 5 பேர் படுகாயடைந்த நிலையில் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டனர். இந்த விபத்தில் மின்பிறப்பாக்கி மற்றும் கடை தொகுதி பலத்த சேதமடைந்ததுடன் அந்த பகுதிக்கான மின்சாரம் தடைப்பட்டுள்ளது
இது தொடர்பான விசாரணைகளை ஏறாவூர் போக்குவரத்து பொலிசார் மேற்கொண்டுவருகின்றனர்.
கனகராசா சரவணன் -