இலங்கையிலிருந்து ஏராளமான இரத்தினக் கற்களை கடத்த முயன்ற நபரை விமான நிலைய பாதுகாப்புப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.
கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து இந்தியாவின் சென்னைக்குச் செல்ல முற்பட்ட வேளையில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபரிடமிருந்து காணப்பட்ட பயணப் பொதியில் 482.02 கிராம் நிறையுடைய பல்வேறு வகையான இரத்தினக் கற்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
பரிசோதனை செய்யப்படும் இயந்திரங்களில் அகப்படாமல் இருக்க கார்பன் தாள்களில் அவை கவனமாகச் சுற்றப்பட்டிருந்ததாகப் பாதுகாப்புப் படையினர் தெரிவித்தனர் .
குறித்த இரத்தினக் கற்கள் மற்றும் சந்தேக நபரை விமான நிலைய சுங்கப் பிரிவினரிடம் ஆஜர்படுத்திய பின்னர் மேலதிக விசாரணைகள் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர் .