வெளிவிவகார செனட் குழு உறுப்பினர்கள் எலிசபெத் ஹோஸ்டுக்கு வழங்கிய பதில்கள் நாட்டுக்கு பாதகமான சூழ்நிலையை உருவாக்கும் என நாடாளுமன்ற உறுப்பினர் சுட்டிக்காட்டியுள்ளார்.
செனட் குழு உறுப்பினர்களின் விசாரணைகளுக்கு அவர் அளித்த பதில்கள் தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளன.
அதில், கடன் மறுசீரமைப்பு செயல்முறை, சர்வதேச நாணய நிதியத்துடன் செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தங்களை செயல்படுத்துதல், தூதரக உறவுகளை பேணுதல், அரசுடன் புதிய கொள்கைகளை அமுல்படுத்துதல், வெளிநாட்டு உள்ளிட்ட பல யோசனைகளை செனட் குழு முன் எலிசபெத் ஹோஸ்ட் முன்வைத்தார். நாட்டின் கொள்கை, வெளிநாட்டு கப்பல்கள் மற்றும் துறைமுகங்கள் தொடர்பான விவகாரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே இவ்வாறு தெரிவித்தார்.