நிர்மாணிக்கப்பட்டு வரும் கொழும்பு – கண்டி மத்திய அதிவேக நெடுஞ்சாலையில் மாகலேகொட மற்றும் பெமுல்லைக்கு இடையில் நேற்று (4) பிற்பகல் கொங்கிரீட் தூண் ஒன்று சரிந்து விழுந்ததாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.
ஓடைக்கு நடுவில் உள்ள இந்த பகுதியில் உள்ள வீதியானது, கான்கிரீட் தூண்கள் மீது அமைக்கப்பட்டு, கட்டுமான பணியின் போது போடப்பட்ட குறுக்கு கான்கிரீட் பீம் நடுவில் உடைந்துள்ளது.
வீதி அமைக்கும் பணி நடைபெற்று வரும் நிலையில், கான்கிரீட் கற்கள் இடிந்து விழுந்தால், சாலை அமைக்கப்பட்ட பின், நெடுஞ்சாலையில் பயணிப்பது பெரும் ஆபத்தை ஏற்படுத்தும் என, அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.