மத்திய மலைநாட்டில் அதிகாலை முதல் பெய்து வரும் கடும் மழை காரணமாக மகாவலி கங்கையின் நீர் மட்டம் அதிகரித்துள்ளது.
இதன் காரணமாக பொல்கொல்லை நீர்தேக்கத்தின் ஐந்து வான் கதவுகள் ஒன்று ஒன்றறை மீட்டர் வீதம் இன்று வியாழக்கிழமை (30) பிற்பகல் முதல் திறக்கப்பட்டுள்ளதாக மகாவலி அதிகார சபையின் பொல்கொல்லை காரியாலயம் தெரிவித்துள்ளது.
பொல்கொல்லை நீர்தேக்கத்தின் ஐந்து வான் கதவுகள் ஒன்று ஒன்றறை மீட்டர் வீதம் திறக்கப்பட்டுள்ளதாகவும் அதனூடாக ஒரு வினாடிக்கு (செக்கன்) 19,000 ம் கன அடி நீர் விக்டோரியா நீர்தேக்கத்திற்கு அனுப்புவதாகவும் அக் காரியாலயம் மேலும் தெரிவித்த்து.
மகாவலி கங்கையில் அதிக அளவில் நீர் அதிகரிப்பதால் பொதுமக்கள் அவதானமாக இருக்க வேண்டும் என்றும் அக் காரியாலயம் மேலும் தெரிவிக்கின்றது.