நடைபெற்ற கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின் விஞ்ஞானப் பாட வினாத்தாளின் சில வினாக்களில் காணப்பட்ட குளறுபடிகள் காரணமாக, குறித்த வினாக்களுக்கு மாத்திரம் இலவசப் புள்ளிகள் வழங்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
விஞ்ஞானப் பாடத்திற்கான வினாத்தாளில் காணப்படும் சில வினாக்கள் பாடத்திட்டத்திற்கு அப்பால் காணப்படும் விடயங்களில் இருந்து தயாரிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
இச்சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு 2 MCQ வினாக்களுக்கு 2 இலவசப் புள்ளிகளை வழங்க நடவடிக்கை எடுத்துள்ளதாக பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களுக்கான உயர்தர வகுப்புக்களை ஆரம்பிக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளும் தயார்படுத்தப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
இதன்படி, உயர்தர வகுப்புக்களை எதிர்வரும் 4ஆம் திகதி ஆரம்பிக்கவுள்ளதாக கல்வி அமைச்சு குறிப்பிடுகின்றது.
இதற்கான சுற்று நிரூபம், மாகாண கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
இந்த விடயம் தொடர்பான தகவல்கள் கிடைக்காத பட்சத்தில், மாகாண அல்லது வலய கல்வி அதிகாரிகளை தொடர்புக்கொண்டு அதிபர்களுக்கு பெற்றுக்கொள்ள முடியும் என கல்வி அமைச்சு கூறியுள்ளது.
உயர் தர வகுப்பு தொடர்பான தகவல்களை மாணவர்கள் அறிந்துகொள்ள வேண்டுமாயின், பாடசாலை அதிகாரிகளை தொடர்புக்கொள்ளுமாறு கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது