டுபாயிலிருந்து நாட்டுக்கு அழைத்து வரப்பட்ட
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியான மன்னா ரமேஷ் மேற்கொள்ளப்பட்ட முதற்கட்ட விசாரணைகளின் போது, வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட கைக்குண்டு மற்றும் மோட்டார் சைக்கிள் என்பன கண்டுபிடிக்கப்பட்டதாக மேல்மாகாண தெற்கு குற்றத்தடுப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.அவிசாவளை யலகம நாபாவெலவில் உள்ள அவரது வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த போதே குறித்த பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.
குறித்த கைக்குண்டு வீட்டினுள் புதைக்கப்பட்டிருந்த நிலையிலும், மோட்டார் சைக்கிள் வீட்டின் பின்புறம் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் 7/1 இன் கீழ் சந்தேகநபர் குற்றப் பிரிவில் மேல்மாகாண தென்திசை குற்றப் பிரிவின் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ஜனக குமார முன்னிலையில் மேலதிக விசாரணைகளுக்காக 72 மணிநேரம் தடுத்து வைக்கப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.