கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிட்டுள்ளதாகக் கூறப்படும் கப்பலின் கெப்டன் ஒருவருக்கு வெளிநாட்டு பயணத்தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்திய கப்பல் ஒன்றின் கெப்டன் ஒருவருக்கு கொழும்பு மேலதிக நீதவான் இந்தத் தடையை விதித்துள்ளார்.
குறித்த இந்திய கப்பலிலிருந்து எரிபொருள் கசிவு ஏற்பட்டுள்ளதாகத் துறைமுக பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் பிரகாரம் நீதிமன்றத்திற்கு உண்மைகளை தெரிவித்து இந்தத் தடையை விதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் துறைமுகப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.