Our Feeds


Friday, May 17, 2024

ShortNews Admin

டுபாயில் இருந்து வந்த இரு இலங்கையார்கள் கைது!


கட்டுநாயக்கா பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில்  குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள்,  1,083 கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் 200 உயர் கொள்ளளவு ​கொண்ட பென்டிரைவ்களை வைத்திருந்த 2 இலங்கைப் பயணிகளை கைது செய்துள்ளனர்.

இன்று (17) காலை டுபாயில் இருந்து குறித்த 2 2 இலங்கைப் பயணிகளும் கட்டுநாயக்கா பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு வந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேகநபர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்ட பொருட்களின் பெறுமதி சுமார் 50 மில்லியன் ரூபா எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »