அனுமதிப்பத்திரம் இன்றி இரத்தினக்கல் வியாபாரத்தை நடத்தி ஆறு மாதங்களில் 36 மில்லியனுக்கும் அதிக வருமானம் ஈட்டிய குற்றச்சாட்டில் சீனப் பிரஜை ஒருவருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் 2 ஆண்டுகள் கடூழிய சிறை தண்டனை விதித்து மூன்றரை லட்சம் ரூபாய் அபராதம் செலுத்துமாறு உத்தரவிட்டுள்ளது .
சீன மொழிபெயர்ப்பாளராக பணிபுரிவதற்காக இலங்கைக்கு வந்து, அனுமதிப்பத்திரம் இன்றி இலங்கையில் இரத்தினக்கல் வியாபாரத்தை நடத்தி ஆறு மாத குறுகிய காலத்தில் 36 மில்லியனுக்கும் அதிகமான வருமானத்தை பெற்ற சீன பிரஜை ஒருவருக்கே இவ்வாறு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது .