12.5 கிலோ எடையுள்ள லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலை குறைக்கப்படவுள்ளதாக லிட்ரோ நிறுவனத் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்தார்.
அதன்படி தற்போது .4,115 ரூபாவாக உள்ள 12.5 கிலோ எடையுள்ள எரிவாயுவின் விலை 4000 ரூபாவுக்கு விற்பனை செய்ய முடியுமென அவர் தெரிவித்தார்.
அந்தவகையில் குறித்த விலைக்குறைப்பு நாளை முதல் அறிவிக்கப்படுமென அவர் மேலும் தெரிவித்தார்.