டயானா கமகே நீக்கப்பட்டதன் மூலம் வெற்றிடமான நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான், ஐக்கிய மக்கள் சக்தியினால் முன்மொழியப்பட்டுள்ளதாக உரிய வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தின் பிரகாரம் இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின்படி, டயானா கமகேவின் பதவி நீக்கப்பட்டது.
இதன்படி வெற்றிடமாகவுள்ள பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்கு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் நியமிக்கப்படவுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தி தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் தெரிவித்திருந்தது.