லங்கா பைட் லீக் இணை ஸ்தாபகர்களான இம்மானுவேல் முருகையா, லெப்டினன் கொமாண்டர் (ஓய்வுநிலை) சந்த்ரலால் நாணயக்கார ஆகியோரின் எண்ணக்கருவில் உதயமானதே லங்கா பைட் லீக் குத்துச்சண்டைப் போட்டியாகும்.
இலங்கை குத்துச்சண்டை சங்கத்துடன் இணைந்து நடத்தப்பட்ட லங்கா பைட் லீக்கில் இலங்கையின் முன்னணி குத்துச்சண்டை வீரர்கள் 10 பேரும் முன்னணி வீராங்கனைகள் 6 பேரும் போட்டியிட்டனர்.
இப் போட்டியை தொழில்முறை குத்துச்சண்டை போட்டியாக தரம் உயர்த்தி வருடந்தோறும் இப்போட்டியை நடத்தவுள்ளதாக இணை ஸ்தாபகர் இம்மானுவேல் முருகையா தெரிவித்தார்.
அடுத்த வருடம் போட்டியாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் எனவும் சர்வதேச குத்துச்சண்டை வீரர்கள் அழைக்கப்படுவர் எனவும் அவர் குறிப்பிட்டார்.
அத்துடன் இப்போட்டியை பாடசாலைகள் மட்டத்திலும் மாகாணங்கள் மட்டத்திலும் நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
இவ்வருடப் போட்டிகளில் வெற்றி பெற்ற ஒவ்வொருவருக்கும் தலா 50,000 ரூபா பணப்பரிசும் இரண்டாம் இடத்தைப் பெற்றவர்களுக்கு 25,000 ரூபா பணப்பரிசும் வழங்கப்பட்டது.
அத்துடன் பெஸ்புக் மற்றும் இன்ஸ்டக்ராம் மூலம் நடத்தப்பட்ட வாக்களிப்பின் பிரகாரம் இப் போட்டியில் பிரபல்ய வீரராகத் தெரிவான பேக் 2 ஃபிட் குத்துச்சண்டைக் கழக வீரர் டி. எச். திஸ்ஸஆராச்சிக்கு 20,000 ரூபா விசேட பணப்பரிசு வழங்கப்பட்டது.
போட்டி முடிவுகள்
ஆண்கள்
48 கிலோ கிராம் எடைப் பிரிவு
எச். திசரஆராச்சியை (பாக்2ஃபிட் கழகம்) 4 - 1 என்ற புள்ளிகள் அடிப்படையில் பி. ஜயவர்தன (இராணுவம்) வெற்றிகொண்டார்.
54 கிலோ கிராம் எடைப் பிரிவு
எல். எரந்தவை (விமானப்படை) 5 - 0 என்ற புள்ளிகள் வித்தியாசத்தில் பி. தர்மசேன (இராணுவம்) வெற்றிகொண்டார்.
57 கிலோ கிராம் எடைப் பிரிவு
ஈ. மதுஷானை (விமானப்படை) 5 - 0 என்ற புள்ளிகள் வித்தியாசத்தில் ஆர். பிரசன்ன (இராணுவம்) வெற்றிகொண்டார்.
67 கிலோ கிராம் எடைப் பிரிவு
எஸ். அதிகாரியை (கடற்படை) 5 - 0 என்ற புள்ளிகள் வித்தியாசத்தில் எஸ். பெர்னாண்டோ (இராணுவம்) வெற்றிகொண்டார்.
75 கிலோ கிராம் எடைப் பிரிவு
ஐ. ஆரியரத்னவை (கடற்படை) 4 - 1 என்ற புள்ளிகள் அடிப்படையில் ஜி. பத்மசிறி (இராணுவம்) வெற்றிகொண்டார்.
பெண்கள்
48 கிலோ கிராம் எடைப் பிரிவு (பெண்கள்)
நெத்மி பெரேராவை (இராணுவம்) 3 - 2 என்ற புள்ளிகள் வித்தியாசத்தில் செனுரி ரட்னபுலி (ஹன்வெல்லை ராஜசிங்க கு.க.) வெற்றிகொண்டார்.
54 கிலோ கிராம் எடைப் பிரிவு
தெவ்மி மெனிக்கேயை (கடற்படை) 5 - 0 என்ற புள்ளிகள் வித்தியாசத்தில் நிஷாதி மல்ஷானி (விமானப்படை)
57 கிலோ கிராம் எடைப் பிரிவு
சாமலி தாருகாவை (பொலிஸ்) 5 - 0 என்ற புள்ளிகள் அடிப்படையில் துஷாரி பெரேரா (விமானப்படை) வெற்றிகொண்டார்.