மகாவலி அதிகார சபைக்குச் சொந்தமான காணிகளில் மேற்கொள்ளப்படும் சட்டவிரோத செயற்பாடுகளுக்கு இடமளிக்கப்பட மாட்டாது என பெருந்தோட்டக் கைத்தொழில் மற்றும் மகாவலி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தே தெரிவித்தார்.
ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே லொஹான் ரத்வத்தே இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
ஒரு சில இடங்களில் கைவிடப்பட்டுள்ள சுற்றுலா பங்களாக்களை புனர்நிர்மாணம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள மிகவும் அழகான சுமார் 30 பங்களாக்களும் உள்ளன. அத்துடன், மகாவலி அபிவிருத்தி அதிகார சபைக்கு சொந்தமான காணி தொடர்பில் சிக்கல்கள் காணப்படுகின்றன. உறுமய திட்டத்தை அமுல்படுத்துவதற்கு இணையாக மகாவலி அதிகார சபைக்கு சொந்தமான காணிகள் தொடர்பான பிரச்சினைகளைத் தீர்ப்பது தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது என்றார்.