மலையக ரயில் மார்க்கத்தின் பேராதனை மற்றும் கெலிஓயா நிலையங்களுக்கு இடையிலான ரயில் பாதையில் இன்று (30) காலை பாரிய மரமொன்று முறிந்து வீழ்ந்ததால் மலையக ரயில் மார்க்கத்தின் போக்குவரத்து தடைப்பட்டுள்ளதாக ரயில் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக கொழும்பு மற்றும் பதுளை கோட்டைக்கு இடையில் ரயில் சேவையில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.