வடமத்திய மாகாணத்திலுள்ள அனைத்து அரச வைத்தியசாலைகளிலும் இன்று(09) தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்க 72 சுகாதார தொழிற்சங்கங்கள் தீர்மானித்துள்ளன.
பொருளாதார நீதியை நிறைவேற்றுமாறு முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளுக்கு தீர்வு வழங்குவதாக சுகாதார அமைச்சு தெரிவித்திருந்தாலும், இதுவரை அது நடைமுறைப்படுத்தப்படவில்லை என இந்த தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது.
இதேவேளை, மத்திய மாகாணத்திலுள்ள அரச வைத்தியசாலைகளில் எதிர்வரும் 13ஆம் திகதியும் சப்ரகமுவ மாகாணத்தில் எதிர்வரும் 14ஆம் திகதியும் பணிப்பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்படவுள்ளது.