Our Feeds


Wednesday, May 29, 2024

Anonymous

கனடாவில் அதிகரிக்கும் நோய்த்தாக்கம் தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

 


 கனடாவில்(Canada) ஒன்றாரியோ மாகாணத்தில் உண்ணிகள் காரணமாக லைம் என்ற நோய் பரவுவதாக அந்நாட்டு சுகாதாரத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

குறித்த மாகாணத்தில் வழமையை விடவும் இம்முறை லைம் நோய்த் தொற்று அதிகளவில் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில் ஒன்றாரியோவில் சுமார் 13 உண்ணி வகைகள் காணப்படுவதாக குறிப்பிடப்படுகின்றது.

கோடை காலங்களில் குறிப்பாக பூச்சியம் பாகையை விடவும் கூடுதலான வெப்பநிலை நிலவும் போது இந்த வகை உண்ணிகள் அதிகளவில் பரவத் தொடங்குவதாக கூறப்படுகின்றது.

மேலும், உண்ணிகள் கடிக்கும் அனைவரும் நோய் தாக்கத்திற்குள்ளாவதில்லை எனவும், அவரவர் உடல் நிலையை பொறுத்து நோய்ப் பாதிப்பு ஏற்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »