Our Feeds


Thursday, May 2, 2024

News Editor

இம்மாத இறுதிக்குள் எமது மக்களுக்கு காணி உரிமை நிச்சயம் கிடைக்கும் - ஜீவன்


  இந்த மாத இறுதிக்குள் எமது மக்களுக்கு காணி  உரிமை நிச்சயம் கிடைக்கும் என்று இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் செயலாளரும் அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.

கொட்டகலை பொது  மைதானத்தில் நேற்று இடம்பெற்ற இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் மே தினக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே  ஜீவன் தொண்டமான் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஆறுமுகன் தொண்டமான் மறைந்த பின்னர் எம்மால் மேதினக் கூட்டம் நடத்த முடியவில்லை.

கொரோனா, பொருளாதார நெருக்கடி என்பவற்றை எதிர்கொள்ள நேரிட்டது. இ.தொ.க முடிந்து விட்டதா என கேள்வி எழுப்பினார்கள். 4 வருடத்தின் பின்னர் பாரிய மேதின கூட்டமொன்றை நடத்துகின்றோம்.

தோட்டத் தொழிலாளர்களுக்கு 1700 ரூபா சம்பள அதிகரிப்பை பெற்றுக் கொடுப்பதாக உறுதியளித்தோம்.

அந்த வாக்குறுதியை நிறைவேற்றியிருக்கிறோம். கடந்த 4 வருடங்களாக பல்வேறு அவமானங்களையும்  பிரச்சினைகளையும்  சந்தித்திருக்கிறோம்.

எமது மக்கள் பல பிரச்சினைகளை எதிர்கொள்கின்றனர். நாம் நில உரிமையற்ற சமூகமாக இருக்கிறோம். இந்த மாத இறுதிக்குள் எமது மக்களுக்கு காணி  உரிமை நிச்சயம் கிடைக்கும் என்றார். 

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »