Our Feeds


Monday, May 13, 2024

ShortNews Admin

ஆர்ப்பாட்ட பேரணிக்கு தடை உத்தரவு.



இன்று (13) ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ஆர்ப்பாட்ட பேரணி மற்றும் ஆர்ப்பாட்டத்துக்கும் தடை விதித்து  நீதிமன்றால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகம், நாவல திறந்த பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் கல்விசாரா ஊழியர்கள் இணைந்து குறித்த ஆர்ப்பாட்ட பேரணியை ஏற்பாடு செய்துள்ளனர்.

ஆர்ப்பாட்டத்தின் போது ஒலிபெருக்கிகளை பயன்படுத்தி வீதி நாடகங்களை நடத்தவுள்ளதாக மிரிஹான தலைமையக பொலிஸ் பரிசோதகருக்கு கிடைத்த தகவவலை அடுத்து அவரால் முன்வைக்கப்பட்ட கோரிக்கை்கு அமைய நுகேகொட நீதவான் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

அனுலா வித்தியாலாயம், புனித ஜோசப் பெண்கள் கல்லூரி, சமுத்திரா தேவி பெண்கள் கல்லூரி, புனித ஜோன்ஸ் ஆண்கள் கல்லூரி, சுஜாதா பெண்கள் கல்லூரி ஆகியவை கல்வி பொது தராதர சாதாரண தார பரீட்சை மையங்களாகவும், பிரதான வீதிக்கு அருகாமையில் அனுலா வித்தியாலயம் பரீட்சை ஒருங்கிணைப்பு நிலையமாகவும் இயங்கி வருவதாலும் இவற்றை கருத்தில் கொண்டு நீதிமன்றால் இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »